பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்ட சம்பவதத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலாப் பகுதிகளில் 48 பகுதிகளை தற்காலிகமாக மூட ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், பாதுகாப்புப்படையினர் நடவடிக்கைக்கு வசதியாகவும் இந்த நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் அரசு எடுத்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் தீவிரமான தேடுதல் வேட்டை, பாதுகாப்பு ஆய்வு ஆகியக் காரணங்களால் 48 சுற்றுலாத்தளங்களை ஜம்மு காஷ்மீர் அரசு மூடியுள்ளது.இந்த 48 சுற்றுலாப் பகுதிகளும் தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கும் பகுதியாகவும், அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகவும், எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று உறுதியற்ற பகுதியாக இருப்பதால் இந்த பகுதிகளை அரசு மூடியுள்ளது. இந்த 48 சுற்றுலாப்பகுதிகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன, அங்கு இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும்.
இதையும் படிங்க: இனிமேல் இப்படி நடக்கக்கூடாது! பஹல்காம் தாக்குதலுக்கு 'AK' கண்டனம்.. விருது பெற்ற கையோடு அஜித் அட்வைஸ்..!



இந்த 48 சுற்றுலாப்பகுதிகளே மாநில அரசு மூட உத்தரவிட்டுள்ளதால், உள்ளூர் மக்களின் பொருளாதாரம், வருமானம், வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், சுற்றுலாவழிகாட்டிகள், டூர் ஏஜென்சிகள் ஆகியோர் ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகள் முன்பதிவை ரத்து செய்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது சுற்றுலாத் தளங்கள் மூடல் முடிவும் வாழ்வாதாரத்தை மோசமாக பாதிக்கும். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாற்று ஏற்பாடுகளையும் விரைவில் அறிவிப்போம் என்று ஜம்மு காஷ்மீர் அரசு உறுதியளித்துள்ளது.

காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் சமீபத்திய பயணிகள் அறிவுரைகளின்படி, எச்சரிக்கையுடன் இடங்களைச் சுற்றுப்பார்க்கலாம். பாதுகாப்புப் படையினர் முகாம்கள், கூடியிருக்கும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதை தவிரிக்க வேண்டும், உள்ளூர் நிர்வாகம், நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து நடந்து கொள்ள வேண்டும். புதிய தகவல்கள், சந்தேகங்களுக்கு அரசின் அதிகாரபூர்வ தகவல் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு.. இந்தியாவின் முடிவால் அலறும் பாகிஸ்தான்..!