யுபிஐ பேமெண்ட் என்ற ஒன்று வந்த பிறகு நாம் கடைகளுக்கு பணம் எடுத்து செல்லவேண்டிய நிலை இல்லாமல் போனது. எங்கு சென்றாலும் பணம் கொடுத்து மிச்ச சில்லறைக்காக தடுமாறும் சூழலை இந்த யுபிஐ பேமெண்ட் போக்கியுள்ளது. மேலும் இது மக்களை பணம் எடுக்க வங்கிகளுக்கு செல்லும் வேலையையும் குறைத்துள்ளது. இதற்கு முன்பு நாம் எங்காவது பணம் செலுத்த வேண்டும் என்றால் ஒன்று பணமாக கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கார்டை தேயிக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. பணம் செலுத்துவது முதல் மற்றொருவருக்கு பணம் அனுப்புவது, பில் கட்டுவது, ரீசார்ஜ் செய்வது என அனைத்திற்கு யுபிஐ உதவிகரமாக உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் சாதாரண பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்திலும் இந்த யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். இதற்கென கூகுல் பே, போன்பே, பேடிஎம் போன்ற பல செயலிகளும் உள்ளன. இதனிடையே இந்த யுபிஐ பயன்படுத்துவது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஒற்றைப் புள்ளியில் ஊசலாடும் வக்ஃபு சட்டம்… மத்திய அரசு செய்யப்போவது என்ன..?

அதாவது தற்போது வரை யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது வரி எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து யுபிஐ செயலிகளிலும் 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு இதற்கு கூட வரியா என கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே எந்த பொருட்களை வாங்கினாலும் வரி, சாப்பாட்டிற்கு வரி செலுத்த வேண்டி சூழலில் தற்போது நம் பணத்தை நாமே பயன்படுத்த வரி செலுத்த வேண்டிய இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: உக்காந்து படிக்கவே இடம் இல்ல; மும்மொழி கொள்கை அவசியமா? காளியம்மாள் தாக்கு!!