ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் இன்று ஒப்பிட்டுள்ளார். பொதுமக்களை குறிவைப்பதில், ஹமாஸ்- பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களிடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு குறித்தும் அவர் எச்சரித்தார்.
"பயங்கரவாதிகள் அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைத்து, ஒருவருக்கொருவர் கைகொடுக்க முயற்சிக்கின்றனர். அவர்களைத் தோற்கடிக்க உளவுத்துறை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று நான் நம்புகிறேன். பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு இணையானது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஹமாஸ்- பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்கும் அக்டோபர் 7 (2023) அன்று இஸ்ரேலில் நடந்ததற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பஹல்காமில் தங்கள் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இஸ்ரேலில் மக்கள் இசை விழாவைக் கொண்டாடினர்
இதையும் படிங்க: இனி பாகிஸ்தான் தப்பிப்பது கஷ்டம்... இந்தியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை குவிக்கத் தயாராகும் உலக நாடுகள்..!
ஹமாஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சமீபத்தில் பயணித்துள்ளனர். அங்கு அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் உள்ளிட்ட சிலரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி அளித்த பதிலையும், குறிப்பாக பீகாரின் மதுபனியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையையும் இஸ்ரேலிய தூதர் பாராட்டினார். கொலைகளுக்கு காரணமானவர்களை வேட்டையாடு வேண்டும் என்றும் இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் உறுதியளித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுகளை உலக சமூகம் அம்பலப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை தனிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. பயங்கரவாதிகள் அவர்களுக்கு பணம், உளவுத்துறை உள்ளீடுகள், ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் தொடர்ச்சியான செயல்களை அனுபவிப்பதால் பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். இந்தியாவில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் கடுமையாக கண்டித்தது. தெதன்யாகு, இந்தியாவுடனான தனது ஒற்றுமையை பிரதிபலித்தார். தாக்குதலின் தீவிரம் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ்தளப்பதிவில், ''இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை அழைத்து இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் இருந்து இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தகவல் அளித்தார். மேலும் குற்றவாளிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும், நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்'' எனக் கூறினார்.
இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் இந்த தாக்குதலைக் கண்டித்தார். ''பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பம், முறைகள், உளவுத்துறையை வழங்குவதில் இஸ்ரேல் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அவர் கூறியிருந்தார். இந்த தாக்குதலை உலகம் முழுவதும் கண்டித்து வரும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், நெதன்யாகுவுக்கும் இடையிலான உரையாடல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பம், முறைகள், உளவுத்துறையை வழங்குவதில் இஸ்ரேல் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேல் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகளை வழங்கியதாக இந்திய இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு.. மூட்டை முடிச்சுகளுடன் காஸாவைவிட்டு வெளியேறும் மக்கள்..!