ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவும் அடங்கும். பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யலாம்.
இதன்மூலம், தமிழக முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகச் செயல்படுவார் எனக்கூறப்பட்டது. இதையடுத்து துணைவேந்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி முடித்தார். இதனிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தமிழக ஆளுநர் ஊட்டியில் துணைவேந்தர் மாநாடு நடத்த இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

உதகை ராஜ்பவனில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழக ஆளுநர் நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டிற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சில முக்கிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்பதில்லை என்று தகவல் வெளியானது.
இதையும் படிங்க: ஆளுநர் கூட்டிய மாநாடு..! ஒட்டுமொத்தமாக புறக்கணித்த பல்கலை. துணை வேந்தர்கள்..!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் வந்த அவர் பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தமிழ்வேந்தன், மதுரை காமராஜர் பல்கலையில் துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால் பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டுக்கு வரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் பொறுப்பு குழுவில் இருந்தும் யாரும் வரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதனிடையே துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு யார் யாருக்கெல்லாம் ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதில் யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்ற பட்டியலை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா மருத்துவ காரணங்களால் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.

தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலையில் 6 பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு எதிராக துணை வேந்தர்கள் மாநாட்டை நடந்த முயன்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர்கள் புறக்கணித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தகவலின் படி, 52 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மாநாடு.. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதலா.? அவசரமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை!