ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மாநாட்டை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் துணைவேந்தர்கள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலையில் 6 பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தகவலின் படி, 52 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டியில் நடைபெறக்கூடிய ஆளுநரின் ஆர்.என்.ரவியின் மாநாட்டிற்கு புறப்பட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீரென பாதி வழியிலேயே திரும்பியது பரபரப்பைக் கிளப்பியது.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பலத்த அடி; அடுத்தடுத்து துணை வேந்தர்கள் புறக்கணிப்பா?

ஆளுநர் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை வேந்தர்கள் பங்கேற்காததால், தானும் பங்கேற்கவில்லை எனக்கூறியுள்ளார். மேலும் சொந்த காரணத்திற்காக வெளியூர் சென்றிருந்தேன். மற்றவர்கள் வந்தால் நானும் மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். யாரும் வரவில்லை என தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் நானும் வரவில்லை என மாநாட்டு ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்து விட்டேன் எனக்கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இங்கு வந்து நாட்டாமை செய்யக்கூடாது - தமிழிசைக்கு தக்ஃலைப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி...!